இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

செவ்வாய், 28 ஜூலை 2015 (10:00 IST)
இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இது ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ளது.
 
இந்தோனேஷியா ஐரியன் ஜெயா மாகாணத்தில் இன்று காலை 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
ஐரியன் ஜெயா மாகாணத்தின் மேற்கு ஜயபுற பகுதியில் இன்று காலை சரியாக 6.41 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பூமியில் 32.8 மைல் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தப் பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் அப்போது மிகப்பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்