ஈரானில் நில நடுக்கம்: மக்கள் பதற்றம்

திங்கள், 8 ஜூலை 2019 (17:21 IST)
ஈரான் நாட்டில், தென்மேற்கு பகுதியான குசேஸ்தான் மாகாணத்தில் இன்று 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று காலை இரான் நேரப்படி 11.30 மணியளவில், ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குசேஸ்தான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

பூமியின் அடியில் 17 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.7 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தில் சேதமான விபரங்களோ, ஏற்பட்ட பாதிப்புகளோ குறித்து எந்த தகவலும் சரியாகத் தெரியவில்லை. எனினும் இந்த நிலநடுக்கத்தால் மஸ்ஜித் சுலைமான் என்ற பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்ட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்