சாம்பலாக போகும் பூமியின் பல பகுதிகள்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!

வியாழன், 22 ஜூன் 2017 (14:49 IST)
பூமியின் பல நகரங்கள் அழியக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 


 
 
வரும் ஜூன் 30 ஆம் தேதி சர்வதேச விண்கல் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், பூமியிற்கு விண்கல் தாக்குதல் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று எச்சரித்துள்ளனர்.
 
இந்த நிகழ்வு நிச்சயமாக நடக்கூடும் ஆனால் இது எப்பொழுது நடக்கும் என்ற கூர முடியாது என க்வீன்ஸ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த 1908 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி ரஷ்யாவின் சைபீரியா பிரதேசத்தில் உள்ள டுங்குஸ்கா என்ற இடத்தில் சிறிய அளவிலான விண்கல் வெடித்துச் சிதறி விழுந்தது. இதில் பல ஆயிரம் மரங்கள் சாம்பலாயின. இந்த நாள்தான் விண்கல் தினமாக அனுசரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த முறை தாக்கவுள்ள விண்கல் ஒரு பெரிய நகரத்தையே அழிக்கக் கூடிய அளவிற்கு சக்தி வாய்ந்தது. இதனால் பூமியின் பல நகரங்கள் சம்பலாக்கூடிய அபாயம் ஒருப்பதாக தெரிவித்துள்ளனர்.
 
மேலும், பூமியைச் சுற்றி சும்மார் 1800-க்கும் மேற்பட்ட அபாயகரமான விண்கற்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்