இது அந்த பகுதியிலுள்ள மொத்த கழுகுகளின் எண்ணிக்கையில் பாதி என்றும் தெரியவந்துள்ளது. கிரிஃபான் எனும் வகையை சேர்ந்த இந்த கழுகுகள், இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேலின் இயற்கை மற்றும் பூங்காக்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.
எந்த விதமான விஷம் கொடுத்து, எப்படி கழுகுகள் கொல்லப்பட்டன என்பது குறித்தும், இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.