இனிப்பு சுவை நிறைந்த, செயற்கை முறையில் உருவாக்கப்படும் குளிர்பானங்களால், உடல் பருமன், சக்கரை அளவு கூடுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக, பல ஆய்வரிக்கைகள் கூறிவந்தன.
ஆனால் தற்போது பிரான்சில் உள்ள பாரிஸ் பல்கலைகழகம் ஒரு அதிரடி ஆய்வு ஒன்றை மேற்கொண்டு உள்ளது. அதில் உடல் திறன்மிக்க 1 லட்சத்து ஆயிரத்து 257 பிரெஞ்சுக்காரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் 21 சதவீதம் ஆண்களும், 79 சதவீதம் பெண்களும் அடங்குவார்கள். இவர்களிடம் ஆன்லைன் மூலம், 48 மணி நேரம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது அவர்களின் உணவு பழக்கத்தை குறித்து விசாரித்து உள்ளனர்.
அதில் அதிகளவில் குளிர்பானங்களை குடிக்கும் நபர்களுக்கு, மார்பக புற்று நோய், குடல் புற்று நோய் பாதிப்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த தகவல் இங்கிலாந்து மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.