வலிப்பு நோயிலிருந்து தனது ஏஜமானியை காப்பாற்றிய நாய்

வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (11:19 IST)
இங்கிலாந்த நாட்டின் பெல்ஃபாஸ்ட் தலைநகரில் ஷானோன் லாக், என்ற மாணவி அங்குள்ள வாழ்ந்து வந்துள்ளார். இந்த பெண்ணிற்கு வராத்திற்கு இரண்டு முறை வலிப்பு நோய் வருமாம். இவர் செல்ல பிராணியாக  பப்பி என்ற நாயை வளர்த்து வந்தார்.

இந்நிலையில் அந்த மாணவிக்கு வலிப்பு வந்தது. இதனைக் கண்ட அவரது நாய் அந்த பெண்ணை 15 முதல் 20 நிமிடங்கள் அவரை முகர்ந்து பார்த்துள்ளது.இதையடுத்து அந்த பெண்ணிற்கு வலிப்பு நின்று விட்டது. இது குறித்து அவர் கூறும்போது, எனது நாய் என்னை வலிப்பு நோயிலிருந்து காப்பாற்றியுள்ளது. தற்பொழுது வலிப்பு நோய் குறைந்துவிட்டது, நான் இப்பொழுது பயமில்லாமல் வெளியே சென்று வருகிறேன் என்று ஷானோன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் பாப்பி தனது நண்பன் மட்டும் அல்ல எனது உயிர் எனவும் தெரிவித்தாள்.

தன்னை போன்று வலிப்பு நோய் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உதவ பப்பியை தனது நகரத்தில் உள்ள குயின்ஸ் பல்கலைகழகத்தில் ஆரய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக ஷானோன் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்