சூரியனின் கதிர்கள் பனிக்கட்டிகள் மீது பட்டு எதிரொளிக்கும் போது சூரியனை சுற்றி ஒளிவட்டம் தெரியும். இது மிகவும் சாதரணமான ஒன்றுதான். ஆனாலும், சுவீடன் நாட்டில் காணப்படும் ஒளிவட்டம் வித்தியாசமானதாக இருக்கும்.
அதாவது, சுவீடனில் நடுவில் சூரியனும் அதன் வலது மற்றும் இடது பக்கத்தில் சூரியனின் பிரதிபலிப்பும் தெரியும். இந்நிலையில், இதற்கான அறிவியல் காரணத்தை நாசா விளக்கியுள்ளது.
பனிக்கட்டிகள் காற்றில் இருக்கும். அதன் மீது சூரிய ஒளி படும் போது ஒளியானது பல்வேறு கோணங்களுக்கு எதிரொளிக்கப்படும். இந்த ஒளிவட்டமானது பனிக்கட்டியின் வடிவத்தை பொறுத்து மாறுபடும். இது போன்ற ஒளிவட்டம் நிலா வெளிச்சத்திலும் ஏற்படும். ஆனால் வெளிச்சம் குறைவாக இருப்பதால் ஒளிவட்டம் சரியாக தெரியாது என கூறப்பட்டுள்ளது.