மவன நீ இத தொட்ட, அதோட செத்த: அமெரிக்க போலீஸ் எச்சரிக்கை!!

திங்கள், 8 மே 2017 (16:14 IST)
அமெரிக்காவில் சக்திவாய்ந்த மாத்திரைகளை கையால் தொட்டதால் பலர் உயிரிழந்துள்ளதால். மக்களுக்கு போலீஸார் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர்.


 
 
Furanyl Fentanyl என்னும் சக்தி வாய்ந்த மாத்திரையை கையால் தொட்டால், ரசாயானம் தோல் வழியாக நுழைந்து ரத்ததில் ஊடுருவி மூச்சு பாதிப்பு, வாந்தி மற்றும் நினைவிழப்பை ஏற்படுத்தி அடுத்த சில விநாடிகளில் இதய துடிப்பை நிறுத்தி உயிரைப் பறிக்கும் என எச்சரித்துள்ளனர்.
 
இது மாத்திரை மற்றும் பவுடர் வடிவில் வருகிறது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் மட்டும் 19 பேர் இந்த மாத்திரையால் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 
மேலும், கடந்த 2015 மற்றும் 2016-ல் அமெரிக்காவின் 5 மாநிலத்தில் இந்த மாத்திரையால் 128 பேர் இறந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்