இலங்கை குண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு - 500 பேர் படுகாயம் !

திங்கள், 22 ஏப்ரல் 2019 (08:56 IST)
இலங்கையில் நேற்று நடைபெற்ற தொடர் வெடிகுண்டு தாக்குதலில் பலியானாரோரின் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையில் நேற்று புனித வெள்ளி தினம் நாடெங்கும் கொண்டாடப்பட்ட வேளையில் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதல்களில் நேற்றுவரை 200 பேர் வரை பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இன்று பலி எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 500 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதல்களில் ஏராளமான வெளிநாட்டினரும் உயிரிழந்திருக்கின்றனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரைப் பொறுப்பேற்கவில்லை. ஆனால் ஒரேக் குழுவை சேர்ந்த 7 பேர்கள் இதுவரைக் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கைப் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை முழுவதும் ராணுவத்தினர் காவலுக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்