தாய்க்கு பிரசவம் பார்த்த மகள்: நெகிழ்ச்சி தருணம்!!
வியாழன், 15 ஜூன் 2017 (10:59 IST)
12 வயது சிறுமி தனது தாய்க்கு பிரசவம் பார்த்த நெகிழ்ச்சி தருணம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஜெஸீ, தனது தாயின் பிரசவத்தை நேரடியாக பார்க்க விரும்பி இருக்கிறார்.
ஆனால், அந்த மருத்துவமனை மருத்துவர்கள் ஜெஸீயை தாய்க்கு பிரசவமே பார்க்க வைத்துவிட்டனர். அதாவது, பிரசவம் நடந்து கொண்டிருந்த போது, அவளே தன் தம்பியை தாயின் கருவறையில் இருந்து வெளியே எடுத்துள்ளார்.
தன் சகோதரனை வெளியே தூக்கும் போது, தன்னை அறியாமல் அவள் அழுதுவிட்டாள். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.