சவூதியில் இருந்து திருச்சிக்கு தினசரி நேரடி விமான சேவை

திங்கள், 8 பிப்ரவரி 2016 (03:00 IST)
சவூதியில் உள்ள தமாம்மில் இருந்து திருச்சி, கோவை மற்றும் மதுரைக்கு தினசரி நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
 

 
சவூதியில் இருந்து திருச்சி, கோவை மற்றும் மதுரைக்கு தினசரி நேரடி விமான சேவை இல்லை என்ற குறை இரந்து வந்தது.
 
இந்த நிலையில், ஜனவரி 16 ஆம் தேதி முதல் அந்த குறை நீக்க உள்ளது. சவூதியில் உள்ள தமாம்மில் இருந்து திருச்சி, கோவை மற்றும் மதுரைக்கு தினசரி விமான சேவையை, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடங்க உள்ளது.
 
தமாமிலிருந்து மதியம் 15.20 மணிக்கு புறப்பட்டு இரவு 19.25 மணிக்கு திருச்சி சென்றடையும்.
 
திருச்சியிலிருந்து மதியம் 15.20 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 02.10 மணிக்கு தமாமிம் சென்றடையும்.
 
தமாமில் இருந்து காலை 06.50 மணிக்கு புறப்பட்டு இரவு 20.05 மணிக்கு மதுரை சென்றடையும். மதுரையில் இருந்து காலை 06.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.50 மணிக்கு தமாமிம் சென்றடையும்.
 
தமாமில் இருந்து காலை 06.50 மணிக்கு புறப்பட்டு இரவு 22.10 மணிக்கு கோவை சென்றடையும். கோவையில் இருந்து  காலை 11.55 am  மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 02.10 மணிக்கு தமாமிம் சென்றடையும்.
 
இந்த விமானத்தில், பயணம் செல்லும் பயணிகள் தங்களுடன் 40 கிலோ லக்கேஜ் இலவசமாக எடுத்துச் செல்ல விமான நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்