மிகவும் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்… சைக்கிள் வீரர்கள் படுகாயம்!

வியாழன், 8 அக்டோபர் 2020 (10:36 IST)
இத்தாலியில் புகழ்பெற்ற சைக்கிள் பந்தயம் நடந்துகொண்டிருந்த போது ஹெலிகாப்டர் மிக தாழ்வாக பறந்ததால் பலத்த காற்று வீசி சைக்கிள் வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

ஜிரோ டி இத்தாலியா சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இத்தாலியில் ஆண்டுதோறும் நடக்கும் மாபெரும் சைக்கிள் போட்டி. இந்த போட்டியில் கலந்துகொள்பவர்கள் அனைவரும் சமதளம், மலைப்பாதை என நிர்ணயிக்கப்பட்ட தூரத்தைக் கடக்க வேண்டும்.

இந்நிலையில் இந்த் ஆண்டு போட்டிகள் நடந்து கொண்டிருந்த போது மேம்பாலம் ஒன்றில் வீரர்கள் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று மிகவும் தாழ்வாக பறந்து வந்துள்ளது. அதனால் பலத்த காற்று வீச சைக்கிள் வீரர்கள் நிலைதடுமாறு கீழே விழுந்துள்ளனர்.

இதில் இரண்டு வீரர்களுக்கு பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்