உலகளவிய கொரோனா பாதிப்பு எவ்வளவு? இன்றைய நிலவரம்...!!

சனி, 19 செப்டம்பர் 2020 (07:37 IST)
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.06 கோடியாக உயர்ந்துள்ளது.
 
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் அதில் பெரும்பாலானோர் குணமடைந்து வருகின்றனர். குணமடைந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் போதிலும் அதேபோல கொரோனாவால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசம் அதிகமாகவே உள்ளது. 
 
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.06 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9.56 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் ஆறுதல் தரும் விஷயமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 2.23 கோடியாக உயர்வு என தகவல் வெளியாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்