’அந்த நேரத்தில் ‘’அடுத்த பட அறிவிப்பை வெளியிடும் மிஷ்கின்….
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (21:08 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக உள்ள மிஷ்கின் நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ளார்.
கடந்தாண்டு இவருக்கும் நடிகர் விஷாலுக்கும் இடையே கருத்துவேறுபாடு முற்றி பெரும் பிரச்சனை ஏற்பட்டது. பின்னர் இவர் இயக்குவதாக இருந்த துப்பறிவால்ன் 2 படத்தை விஷாலே இயக்குவதாக அறிவித்து இயக்கி வருகிறார்.
இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின் தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்புகளை வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அறிவிப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.