சீனாவின் பௌத்த மதக் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பிலுள்ள இவர், இந்தப் பொறுப்பை வகிக்கும் இளைய துறவியாவார். அரசுக்கு அரசியல் ஆலோசகராகவும் இவர் இருந்து வருகிறார். சீன சமூக வலைதளமான வெய்போ-வில் பல லட்சக்கணக்கானோர் இவரை பின்தொடருகின்றனர்.
இது தொடர்பாக புலனாய்வு குழு ஒன்றை அமைக்கப்போவதாக "வெய்போ" சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோயில் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது, ஆனால், சுயேசொங் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளதை குறிப்பிட்டு காட்டியுள்ளது. புனையப்பட்ட சான்றால், மடாதிபதி சுயேசொங்கை மோசமாக சித்தரிக்கும் நோக்கம் இதில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.