வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா – காதலியை பார்க்க வந்தவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

செவ்வாய், 23 ஜூலை 2019 (16:09 IST)
சீனாவை சேர்ந்த ஒரு இளைஞனும் ஜப்பானை சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நேராக ஜப்பானுக்கே சென்று அவளை சந்திக்கலாம் என திட்டமிட்டார் காதலன். இதற்காக 2400 கி.மீ பயணம் செய்து ஜப்பானுக்கு சென்றிருக்கிறார். ஒரு ஷாப்பிங் மாலில் கரடி போன்ற உடையணிந்து கொண்டு காதலியை பார்க்க சென்றிருக்கிறார்.

ஆனால் அங்கே அவர் கண்ட காட்சி அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது காதலி வேறு ஒருவருடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தார். அதை கண்டதும் கரடி முகமூடியை கழற்றியிருக்கிறார். அவரை அவருடைய காதலி பார்த்து விட்டார். உடனே அங்கிருந்து அந்த காதலர் ஓடியிருக்கிறார். அவரை துரத்தி சென்று கட்டிபிடித்து சமாதானம் செய்திருக்கிறார் அந்த காதலி.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்