பாகிஸ்தானின் பயங்கரவாதிகளை கருப்பு பட்டியலில் சேர்க்க சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை!

வியாழன், 20 அக்டோபர் 2022 (22:32 IST)
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பயங்கரவாதிகளை கறுப்புப்   பட்டியலில் சேர்க்க சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

ஐ நா பாதுகாப்பு கவுன்சிலின் அல் கொய்தா என்ர பயங்கரவாத அமைப்புக்கான தடை  ஆலோசனக்குழுவின் கீழ் மகமூத் தீவிரவாதியை கருப்புப் பட்டியலில் சேர்க்க இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தது.

ஆனால், பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் சீனா தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்த ஆலோசனைக் குழுவின் முடிவுக்கு தொடர்ந்து முட்டுக் கட்டை போட்டு வருகிறது.

மேலும், மும்பை தீவிரவாதத் தாக்குதலில் இச்சதித் திட்டத்திற்கு காரணமான சஜித் மிர், அப்துல்ரவுப், ஜெய்ஸ் இ முகம்மது , மசூத் ஆசார்போன்ற பல பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களை கருப்பு பட்டியலில் சேர்க்கவும் சீனா பல ஆண்டுகளாக முட்டுக் கட்டை போட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்