சிக்காகோ: கறுப்பின இளைஞரை 16 தடவைகள் சுட்டுக் கொன்ற காவல்துறை அதிகாரி

புதன், 25 நவம்பர் 2015 (21:34 IST)
அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் ஒருவரை 16 தடவைகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வெள்ளையின காவல்துறை அதிகாரி ஒருவர் மீது திட்டமிட்ட-சட்டவிரோதக் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.


 

 
சிக்காகோவில் லாக்குவான் மெக்டொனால் என்ற 17 வயது இளைஞனை, ஜேஸன் வான் டைக் என்ற காவல்துறை அதிகாரி கடந்த ஆண்டு அக்டோபரில் சுட்டுக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தின்போது பதிவாகியுள்ள வீடியோ காட்சி ஒன்றை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
 
போலீஸ் அதிகாரி ஒருவர், தங்களிடமிருந்து நகர்ந்து செல்லும் அந்த இளைஞன் மீது துப்பாக்கிச் சூடுகளை நடத்தியதை அந்த வீடியோ காண்பிக்கின்றது.

கையில் கத்தியை வைத்திருந்த லக்குவானிடமிருந்து தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக உணர்ந்ததாக அந்த அதிகாரி கூறியிருக்கிறார்.
 
இதற்கு முன்னர், ஃபெர்குஸன் பிரதேசத்தில் மைக்கல் பிரவுன் என்ற இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்படிருந்த வெள்ளையின போலீஸ் அதிகாரி மீது வழக்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு அதிகாரிகள் எடுத்திருந்த முடிவு பெரும் ஆர்ப்பாட்டங்களை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்