செக் நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர், கமில் பார்டோசெக் என்பவர் ஹெலிகாப்டரிலிருந்து ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்த வீடியோவை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார், அது மிகப்பெரிய அளவில் வைரலானது. இந்த வீடியோவில், நூற்றுக்கணக்கான மக்கள் பணத்தை எடுக்க போட்டி போடும் காட்சியை காணலாம்.