இவரது மறைவை அடுத்து,, இங்கிலாந்து நாட்டின் புதிய மன்னராக 3 ஆம் சார்லஸ் அரியணையின் ஏறினார். இதற்கான முடிசூட்டு விழா இன்று (மே மாதம் 6 ஆம் தேதி) நடைபெற்றது.
இந்த விழா பிரமாண்டமாக நடைபெறும் என்று பக்கிங்காம் அரண்மனை ஏற்கனவே அறிவித்தது.
இவ்விழாவில், அரச மரபுப்படி, சார்லஸ் கையில் செங்கோல், தடி ஆகியவவற்றை ஏந்தி அரியணையில் அமர்வார். இந்த விழாவில் , உலகில் முக்கிய தலைவர் என 2000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று இவ்விழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், முடிசூட்டில் விழாவிற்காக அரண்மனையில் இருந்து சார்லஸ், அவரது மனைவி கமீலா, ஆகியோர் குதிரைகள் பூட்டப்பட்ட தங்க ரதத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு சென்றனர். பாரம்பரிய முறைப்படி, மன்னர் 3 ஆம் சார்லஸ் கையில் செங்கோல் தடி ஏந்தி அமர்ந்தார்.. இதையடுத்து, மூத்த மத குருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு, ஆசிர்வாதத்துடன், புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்பட்டது.