இந்த நிலையில், இலங்கைக்கு இரண்டு நாள் பயணமாக செல்ல உள்ள அவர், பிப்ரவரி 5 ஆம் தேதி இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். பிப்ரவரி 6 ஆம் தேதி, வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, ஈழத்தமிழர் விவகாரம், தமிழக மீனவர்கள் பிரச்சனை போன்றவைகள் குறித்து பேசுவார் என கூறப்படுகிறது.