ஒரு குறுகிய வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மலைப்பாதையின் ஓரம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்த நீலம் ஆற்றுக்குள் சுமார் 110 மீட்டர் ஆழத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பேருந்தில் இருந்த பயணிகள் தப்பிக்க முடியாத சூழ்நிலையில், ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இந்த விபத்தில் 25 பயணிகள் பலியானதாகவும், மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.