பணம் கூட வேணாம், குழந்தை அஸ்தியை கொடுங்க..! – கண்ணீர்விட்ட தம்பதி!

ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (11:03 IST)
பிரிட்டனில் குழந்தையின் அஸ்தியை திருடி சென்ற திருடர்களுக்கு தம்பதியர் விடுத்த கோரிக்கை பலரை கலங்க செய்துள்ளது.

பிரிட்டனின் பிர்மிங்ஹாம் பகுதியில் உள்ள வீட்டில் மர்ம நபர்கள் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புகுந்து அங்கிருந்து பணம், பொருட்களை திருடி சென்றுள்ளனர். ஊருக்கு சென்றிருந்த தம்பதிகள் தங்கள் வீடு கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். மற்ற பொருட்களை தாண்டி அவர்கள் நீண்ட காலமாக பாதுகாத்து வந்த அவர்களது முதல் குழந்தையின் அஸ்தியும் திருடப்பட்டுள்ளது.’

நீண்ட ஆண்டுகள் குழந்தைகள் இல்லாமல் இருந்த அந்த தம்பதியருக்கு பிறந்த முதல் குழந்தை சில நாட்களில் இறந்துவிட்டது. அந்த குழந்தையின் நினைவாக அந்த அஸ்தியை அவர்கள் பாதுகாத்து வந்துள்ளனர். காவல் நிலையத்தில் புகார் அளித்த அவர்கள், பணம், பொருள் கிடைக்காவிட்டாலும் அஸ்தியை மட்டும் கண்டுபிடித்து தருமாறு கோரியுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் திருடர்கள் அஸ்தி கலசத்தை எங்காவது வீசியிருக்கலாம் என்பதால், யாராவது அதுபோன்ற கலசத்தை எங்காவது கண்டால் அதை காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்