43 முறை நெகட்டிவ்; 10 மாதங்கள் சிகிச்சை! – கொரோனாவுக்கு டஃப் கொடுத்த முதியவர்!

வியாழன், 24 ஜூன் 2021 (17:32 IST)
உலகம் முழுவதும் கொரோனா பரவல் உள்ள நிலையில் பிரிட்டனை சேர்ந்த முதியவர் ஒருவர் 10 மாதங்களாக கொரோனாவுடன் போராடி வரும் சம்பவம் வைரலாகியுள்ளது.

உலகம் முழுவதும் பல கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிக்கப்படுபவர்கள் பலர் அதிகபட்சம் 1 மாதம் முதல் 2 மாதம் வரை பாதிப்பை பொறுத்து மருத்துவமனை சிகிச்சை பெறுகின்றனர்.

இந்நிலையில் பிரிட்டனை சேர்ந்த முதியவர் ஒருவர் கடந்த 10 மாதங்களாக கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறார். டேவ் ஸ்மித் என்ற 72 வயது முதியவர் 305 நாட்களாக மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நிலையில் உலகிலேயே கொரோனாவுக்கு அதிக நாட்கள் சிகிச்சை பெற்று வருபவராக அறியப்படுகிறார். அவருக்கு இதுவரை 44 முறை கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 44 முறையும் நெகட்டிவ் உறுதியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்