செத்த எலிக்கு பதிலாக பீர் பெற்றுக்கொள்ளும் திட்டம்

புதன், 23 ஏப்ரல் 2014 (15:17 IST)
நியூசிலாந்தில் எலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதனை கட்டுக்குள் கொண்டு வர ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
நியூசிலாந்தில் உள்ள வெல்லிங்டன்  பல்கலைக்கழகத்தின் சைன்ஸ் சொசைட்டி துறை, எலிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டுவர புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. அதன்படி, செத்த எலிகளை கொண்டுவரும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பப்பில் இலவசமாக பீர் அளிக்கப்படும். 
 
பல்கலைக்கழக மாணவர்கள் எலிகளை பிடிப்பதற்காக மாணவர்கள் அனைவருக்கும் எலிப்பொறி வழங்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக தெரிவித்த பல்கலைக்கழக ஆசிரியர் ஒருவர், நியூசிலாந்தில் எலிகள் தொல்லை அதிகரித்துள்ளது. அவை மரங்களில் ஏறி பறவைகளின் முட்டைகளை உடைத்து அபூர்வமான பறவைகளின் இனப்பெருக்கத்தை பாதிக்கின்றன. 
 
பூங்காக்கள் மற்றும் நீர் நிலைகளில் பொறிகள் வைக்கப்பட்டு எலிகள் பிடிக்கப்படுகின்றன. ஆனால், வீட்டு தோட்டங்களில் இருக்கும் எலிகளை அழிக்க மாணவர்களை ஈடுபடுத்துவதாக தெரிவித்தார்.  
ஆனால் வீடுகளில் பொறிகள் வைக்க முடியவில்லை. எனவேதான் இப்பணியில் மாணவர்களை ஈடுபடுத்த திட்டமிட்டதாக தெரிவித்தார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்