ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து விலகுவதாக 2016ம் ஆண்டு முடிவு செய்தது. அப்போது எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் சரியான தீர்வு எட்டப்படவில்லை. எதிர்க்கட்சிகள் பலர் ப்ரெக்ஸிட் தீர்மானத்துக்கு எதிராக நின்றதால் பிரச்சினை மேலும் சிக்கலுக்குள்ளானது.
இதனால் அப்போது பிரதமராக பொறுப்பு வகித்து வந்த தெரசா மே பதவி விலகினார். அவரது பதவி விலகலுக்கு பிறகு போரிஸ் ஜான்சன் பதவி ஏற்றுள்ளார். ஆனால் ஜான்சனாலும் பிரெக்ஸிட் தீர்மானத்தில் சரியன முடிவை எட்ட முடியவில்லை. எதிர்கட்சிகள் ப்ரெக்ஸிட் தீர்மானத்துக்கு எதிராக இருப்பதால் ஜான்சனுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.