நைட்டு லையிட் போட்டு தூங்கினா வெயிட் போடுமாம்... ஆதாரத்துடன் நிரூபனம்!

புதன், 12 ஜூன் 2019 (13:05 IST)
இரவு நேரத்தில் செயற்கை வெளிச்சத்தில் உறங்குபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும் என ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 
 
அமெரிக்காவை சேர்ந்த தேசிய சுகாதார நிறுவனங்கள் பெண்களின் உடல் நலம், மார்பக புற்று நோய் மற்றும் இதர நோய்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வு சுமார் 43,722 பெண்களிடம் நடத்தப்பட்டது. 
 
ஆய்வு நடத்தப்பட பெண்களிடம் இரவில் நீங்கள் எப்படி தூங்குவீர்கள், அதாவது விளக்கு வெளிச்சத்தில் தூங்குவீர்களா? சிறிய அளவிலான விளக்கு வெளிச்சத்தில் தூங்குவீர்களா? டிவியை ஓடவிட்டு தூங்குவீர்களா? அல்லது வெளிச்சம் எதுவுமின்றி உறங்குவீர்களா? என கேட்கப்பட்டது. 
இதற்கு பதில் அளித்த பெண்கள் பலரில் வெளிச்சத்தில் தூங்கும் பெண்கள் மற்றும் டிவியை ஓடவிட்டு தூங்கும் பெண்களின் உடல் எடை இருட்டில் தூங்கும் பெண்களின் உடல் எடையை விட அதிகமாக இருந்தது. 
 
அதாவது, டிவி போன்றவற்றில் இருந்து வெளியாகும் செயற்கை வெளிச்சம் மெலாடோனின் என்ற ஹார்மோன் சுரப்பதை கட்டுப்படுத்துகிறது. இதனால் தூக்கம் குறைந்து உடலில் கொழுப்பு அதிகரிக்கிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 
 
எனவே இனி தூங்கும் போது டிவி, லைட் ஆகியவற்றை ஆஃப் செய்துவிட்டு தூங்கவும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்