மேலும், கிரகணத்தின் போது சந்திரனின் கீழ் விளிம்பு பிரகாசமாகவும், மேல் விளிம்பு இருளாகவும் காணப்படுமாம். மத்திய மற்றும் கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த் கிரகணம் முழு நிறைவாக மாலை நேரத்தில் தெரியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போல், அலஸ்கா, ஹவாய், வடமேற்கு கனடா ஆகிய பகுதிகளில் கிரகணம் ஆரம்பம் முதல் முடிவு வரை தெரியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், இது போன்ற முழு கிரகணம் 1866 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி தோன்றியதாம்.