இன்றைய நவீன உலகத்தில் மக்கள் பலர், தான் உண்டு தன் வேலை உண்டு என வாழ்ந்து வருகிறார்கள். சில பேர் அடுத்தவர்கள் எப்படி போனாலும் பரவாயில்லை, நாம் நன்றாக இருந்தால் போதும் என இருக்கின்றனர். இவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் ஒரு மாமனிதர் ஏழை எளிய மக்களுக்கு உதவுகிறார்.
நொய்டாவில் உள்ள அனுப் கண்ணா என்பவர் தனது உணவகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு ரூ.5க்கு சாப்பாடு வழங்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல் ரூ.10 க்கு துணிகளும் காலணிகளும் வழங்கி வருகிறார். இதுபற்றி தெரிவித்த அனுப் கண்ணா, தினமும் இந்த உணவகத்தில் 500 பேர் வரை உணவருந்தி வருவதாக தெரிவித்தார். சமூக சேவை செய்ய மனமிருந்தால் போதும், யார் வேண்டுமானாலும் சமூக சேவையில் ஈடுபடலாம் என்று தெரிவித்தார்.