சுவிஸ் வங்கியில் பணம் வைத்துள்ள இந்தியப் பெண்கள் விவரம் வெளியானது

புதன், 27 மே 2015 (00:15 IST)
சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள, இந்தியப் பெண்களின் பெயர் மற்றும் அவர்களின் விவரங்களை அந்நாடு அரசு வெளியிட்டுள்ளது.  
 
இந்திய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர், சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்புப் பணத்தை அதிக அளவில் பதுக்கி வைத்திருப்பதாக பரபரப்பு புகார் கூறப்படுகிறது.  
 
நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது, மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், வெளிநாடுகளில் உள்ள கறுப்புப்பணத்தை மீட்பேன் என நரேந்திர மோடி அறிவித்தார்.  அவர் கூறியது போலவே, வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் பணத்தை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
 
இந்த நிலையில், சங்கீதா சாவ்னே மற்றும் ஸ்னே லதா சாவ்னே என்ற 2 பெண்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை சுவிஸ் வங்கி அந்நாட்டு அரசிதழில் வெளியிட்டுள்ளது. 
 
மேலும், பிரிட்டன், ஸ்பெயின், ரஷ்ய போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களின் பெயர்களும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.  
 
இந்த பட்டியலில் இடம் பெற்ற நபர்கள் தங்களது கூடுதல் விவரத்தை வெளியிடுவதை விரும்பாவிட்டால், இது தொடர்பாக அடுத்த 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்று சுவிஸ் அரசு கூறியுள்ளது.   
 
சுவிட்சர்லாந்து அரசிதழில் இந்த மாதத்தில் மட்டும் 40 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்தியர்கள் சிலரது பெயரை வெளியிட சுவிஸ்அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றதாம். அதில் யார்யார் பெயர் எல்லாம் இடம் பெறப்போகின்றதோ தெரியவில்லை. 

வெப்துனியாவைப் படிக்கவும்