இலக்கியத்துக்கான நோபல் பரிசு: எழுத்தாளர் ஸ்வெட்லானா அலெக்ஸிவிச் தேர்வு

வியாழன், 8 அக்டோபர் 2015 (19:07 IST)
2015ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெலாரஸை நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஸ்வெட்லானா அலெக்ஸிவிச் பெறுகிறார். நோபல் பரிசு பெறும் 14 வது பெண் எழுத்தாளர் இவர் ஆவார். 


 

 
”இரண்டாம் உலகப் போர்” உள்ளிட்ட பல புத்தகங்களை உணர்வுப் பூர்வமாக எழுதியதற்கும், பல மொழிகளில் இருந்து புத்தகங்களை மொழி பெயர்த்துள்ளார் என்பதற்காகவும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு இவர் பெறுகிறார் என்று நோபல் குழு அறிவித்துள்ளது.
 
ஆனால், ரஷ்ய மொழியில் இவர் எழுதிய சர்ச்சைக்குரிய புத்தகம் இன்னமும் அவரது தாய் மொழியில் எழுதப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்