பேஸ்புக்கில் நோட்டிபிகேஷன் வந்தால் ஜாக்கிரதை : வைரஸ் பரவும் வாய்ப்பு

புதன், 29 ஜூன் 2016 (20:22 IST)
சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் உங்கள் நண்பர்களிடமிருந்து நோட்டிபிகேஷன் வந்தால் ஜாக்கிரதையாக கையாள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 

 
உலகம் முழுவதும் உள்ள மக்களால், அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் முக்கியமானது பேஸ்புக். இதன் மூலம் பல்வேறு தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இதன் மூலம் பயன் இருந்தாலும், ஒரு பக்கம் பாதகமும் இருக்கிறது. ஹேக்கர்கள் எளிதாக ஊடுருவ வாய்ப்பிருக்கிறது.
 
அதாவது பேஸ்புக் மூலம் பகிரப்படும் செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மூலம் வைரஸ்கள் அதிக அளவில் பரப்பப்படுகிறது. நமது நண்பர்கள் பெயரில் நமக்கு வரும் நோட்டிபிகேஷன்களால் நமது லேப்டாப், மொபைல் மற்றும் கம்ப்யூட்டருக்கு வைரஸ் பரவுகிறது.
 
அதுவும், புகைப்படங்கள் மூலம் வரும் அறிவிப்புகளால் மால்வேர் டவுன்லோடு ஆகிறது. அதை நாம் கிளிக் செய்தால் வைரஸ் ஆக்டிவேட் ஆகும். குரோம் மட்டுமில்லாமல் எட்ஜ், பயர்ஃபாக்ஸ், சபாரி, ஒப்பேரா மூலமாகவும் இந்த வைரஸ்கள் பரவுகிறது.
 
எனவே உங்கள் பக்கத்திற்கு வரும் நோட்டிபிகேஷன்களை கவனமாக கையாள வேண்டும். கிளிக் செய்யாமல் விட்டு விடுவது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்