மருத்துவ உலகில் முதல்முறை.. ஆணுறையில் வாழைப்பழம்: அதிர்ச்சியில் மருத்துவர்கள்

திங்கள், 30 ஜனவரி 2023 (20:30 IST)
மருத்துவ உலகில் முதல்முறை.. ஆணுறையில் வாழைப்பழம்: அதிர்ச்சியில் மருத்துவர்கள்
மருத்துவ உலகில் முதல்முறையாக ஆணுறையில் வாழைப்பழத்தை வைத்து இளைஞர் ஒருவர் சாப்பிட்ட நிலையில் அவரது உயிரை மருத்துவர்கள் கஷ்டப்பட்டு காப்பாற்றி உள்ளனர். 
 
அமெரிக்காவை சேர்ந்த 34 வயது இளைஞர் ஒருவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதனை அடுத்து அவரை மருத்துவர்கள் சிடி ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது சிறு குடலில் ஆணுறையால் சுற்றப்பட்ட வாழைப்பழம் ஒன்று இருந்ததை பார்த்தனர். 
 
இதனை அடுத்து அவருக்கு மூன்று நாட்கள் சிகிச்சை அளித்து போராடி ஆணுறைடன் கூட வாழைப்பழத்தை வெளியே எடுத்தனர். இதன் பிறகு அவர் இயல்பு நிலைக்கு வந்துள்ளார். 
ஆணுறையில் வாழைப்பழத்தை வைத்து அவர் சாப்பிட்டது அதன் பிறகு நடந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது. மருத்துவ உலகில் இதுவரை ஆணுறையில் வாழைப்பழத்தை வைத்து சாப்பிட்டதை டாக்டர்கள் கேள்விப்பட்டதில்லை என்ற நிலையில் இப்படி ஒரு வினோத சம்பவம் நடந்தது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்