13 வயது மகனுக்கு காண்டம் பரிசு கொடுத்த தாய்

செவ்வாய், 13 ஜூன் 2017 (22:02 IST)
13 வயது என்பது டீன் ஏஜ் ஆரம்பமாகும் பருவம் என்பதால் அந்த வயதில் மிகவும் கவனமாக குழந்தைகளை கண்காணிக்க வேண்டும் என்று பொதுவாக கூறுவதுண்டு. ஆனால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த தாய் ஒருவர் டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கும் தனது மகனுக்கு பிறந்த நாள் பரிசாக காண்டம் உள்பட பல பொருட்கள் அடங்கிய கிப்ட் பாக்ஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.



 


இதுகுறித்து அந்த தாய் கூறியபோது, 'இனி வரும் காலங்களில் என் மகனுக்கு இது போன்ற பொருட்கள் அத்தியாவசியமாக தேவைப்படும். அதனால் தான் கொடுத்தேன் என்று அவர் கூறியுள்ளார். அவர் கொடுத்த கிப்ட் பாக்ஸில் காண்டம் மட்டுமின்றி  ரேஷர், ஷவர் ஜெல், தலைமுடிக்கு தேய்க்கும் ஜெல், பணம் உள்ளிட்ட பொருட்கள் இடம் பெற்றுள்ளன

இந்த தாயின் கிப்ட் குறித்து சமூக வலைத்தளங்களில் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. சில தாய்மார்கள் பாராட்டுகள் தெரிவித்தும், வேறு சில தாய்மார்கள் இந்த இளம்வயதிலேயே எதற்கு ஆணுறை..? என்று திட்டியும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்