தண்ணீரில் உப்பு தன்மை அதிகமானால் என்னவாகும் தெரியுமா? ஆஸ்திரேலிய ஏரியின் நிலை தான்!!

சனி, 11 மார்ச் 2017 (11:08 IST)
ஆஸ்திரேலியாவில் உள்ள ஏரி ஒன்று திடீரென இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 


 
 
ஆஸ்திரேலியாவின் உள்ள மெல்போர்ன் நகரின் வெஸ்ட்கேட் என்ற பூங்காவில் அமைந்துள்ள ஏரி சில நாட்களுக்கு முன்னர் திடீரென இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியது.
 
இந்த ஏரி இளஞ்சிவப்பு நிற மாற்றத்திற்கு சுற்றுசூழல் பெயிண்ட் ஏற்றிச் சென்ற லாரி ஏரியில் கவிழ்ந்ததால் ஏற்பட்டுள்ளது என தகவல்கள் பரவின. 
 
ஆனால் அறிவியலாளர்கள், கடுமையான வெயில் காரணமாக நீர் அதிக அளவில் ஆவியாகி, ஏரியில் உப்புத்தன்மை அதிகரித்துள்ளதே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளனர். 
 
இதனைத் தொடர்ந்து இளஞ்சிவப்பு நிற ஏரியை, ஆஸ்திரேலிய மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்வையிட்டு செல்கின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்