தெலுங்கானா மாநிலம் ஹைதெராபாத் சந்தன்நகரை சேர்ந்தவர் கன்னாராம் ஸ்ரீநிவாஸ். இவர், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள பிரபல நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை பொறியாளராக பணியாற்றி வருபவர். இவர் தனது மனைவி சுப்ரஜா (31), மகள் (5) மற்றும் நான்குமாத ஆண் குழந்தையுடன் இங்குள்ள ஆஸ்திரேலியா நாட்டில் விக்டோரியா பகுதியில் உள்ள 29 மாடிகளை கொண்ட அடுக்கு குடியிருப்பில் வசித்து வந்தார்.