அதிகளவு தண்ணீர் குடிப்பதால் 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல அரசு எடுத்த முடிவு

புதன், 8 ஜனவரி 2020 (09:19 IST)
ஒட்டகங்கள் அதிக அளவு தண்ணீர் குடிப்பதால் மனிதர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் இதனால் 10,000 ஓட்டங்களை சுட்டுக்கொல்ல ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தெற்கு ஆஸ்திரேலியா பகுதியில் ஒட்டகங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் ஒட்டகங்கள் அதிக அளவு தண்ணீர் குடிப்பதால் மனிதர்களுக்கும் மற்ற விலங்குகளுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஒட்டகங்களின் கழிவுகள் அதிகளவு மீத்தேன் வாயுவை இருப்பதாகவும், இது புவி வெப்பமாதலுக்கு ஒரு காரணமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் ஏற்கனவே இலட்சக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழந்த நிலையில் தற்போது பத்தாயிரம் ஓட்டங்களை கொல்ல அரசு முடிவு செய்திருப்பதை விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் சுற்றுச்சூழல் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக இன்று முதல் ஹெலிகாப்டர் மூலம் துப்பாக்கி சுடும் வீரர்களால் ஒட்டகங்கள் கொல்லப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்