அன்னாந்து பார்க்க வைத்த Three Gorges அணையால் அழியப்போகும் சீனா..?

வெள்ளி, 24 ஜூலை 2020 (11:14 IST)
சீனாவின் Three Gorges அணை உடையும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதால் அங்கு பரபரப்பு கூடியுள்ளது. 
 
கிமு 600 முதல், சீனாவிக் 1,500 க்கும் மேற்பட்ட வெள்ளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு “சீனாவின் துக்கம்” அதாவது China's sorrow என்ற பெயர் உள்ளது. உலகெங்கிலும் அதிக மக்கள் தொகை கொண்ட சீனா பள்ளத்தாக்குகளை கொண்ட ஆறுகளை கொண்டுள்ளது. குறிப்பாக யாஞ்சி நதி 6,300 கிமி நீளமுள்ள இந்த நதி சீனாவின் மிகப்பெரிய நதி, உலக அளவில் 3 வது பெரிய நதி. அதாவது உலகின் பெரிய நதியான நைல் நதியை விட 350 கிமி சிறியது. 
 
இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு என்பது அதிக அளவில் ஏற்படகூடும். 1931 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் நான்கரை லட்சம் மக்கள் உழிரிழந்தனர், 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர் என கூறப்படுகிறது. இதன் பின்னரே சீன அரசு யாங்சே நதியின் குறுக்கே அணை ஒன்றை கட்ட முடிவு செய்தது. இந்த அணையை கட்ட அந்த நதியை சுற்றி வாழ்ந்து வந்த 16 லட்சம் மக்கள் வலுக்கட்டாயமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.  
2,250 கோடி டாலர் செலவில் 17 ஆண்டுகள் 40,000த்திற்கும் மேற்பட்டோர் பணி செய்து 185மி உயரமும் 2.2 கிமி நிளமும் கொண்ட இந்த த்ரீ கோர்ஜஸ் அணையை கட்டி முடிந்தனர். இதனை கட்டி முடிக்க 5 லட்சத்தி 10 ஆயிரம் டன் இரும்பு மற்றும் 280 லட்ச க்யூபிக் மீட்டர் கான்கிரீட் பயன்பட்டது. த்ரீ கோர்ஜஸ் அணை 1 லட்ச விவசாய நிலங்களையும், 1 லட்சத்தில் 50 ஆயிரம் ஏக்கர் நில பரப்பை முழ்கடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
த்ரீ கோர்ஜஸ் அணை கட்டப்பட்டதால் யாஞ்சே நதியின் நீர் ஓட்டம் குறைந்தது. ஒரே இடத்தில் தண்ணீர் தேங்குதல் அதிகமானதால் பூமியின் வேகம் 0.06 மில்லி செக்கெண்ட் குறைந்தது. இந்த அணை கிட்டத்தட்ட 10 லட்சம் டன் ப்ளாஸ்டிக் குப்பைகள் கடலில் கலக்காமல் பாதுகாத்துள்ளது. யாங்சே ஆறு ஒரு மிகச்சிறந்த நீர் வழி போக்குவரத்து ஆதாரம் என்பதால் அணை கட்டினால் அந்த போக்குவரத்து பாதிக்கப்பட கூடாது என்பதற்காக சுமார் 3,000 டன் எடையுள்ள சரக்கு கப்பலையே தண்ணீரோடு சேர்த்து தூக்கி அணையின் அந்த பக்கம் வரை கொண்டு செல்ல லிஃப்ட் போன்ற அமைப்பையும் கட்டி முடித்துள்ளனர். இந்த லிஃப்ட் மூலமாக கப்பல் செல்வதற்கு சுமார் 4 - 6 மணி நேரம் ஆகும். 
2009 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த அணை உலகிலேயே அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இடம். இந்த அணை மூன்று அடிப்படை பாகங்களை கொண்டது. அதாவது, main dam, ship lock, ship lift. இந்த அணை அமெரிக்காவின் ஹூவர் அணையை விட பெரியது. அதேபோல ஹூவர் அணையை விட 10 மடங்கு அதிக மின் உற்பத்தி செய்யக்கூடியது. இந்த அணை மொத்தம் 32 ஜெனரேட்டர் உள்ளது. இந்த ஜெனரேட்டரும் ஒரு பெரிய அணு உலைக்கு சமமானது. இந்த அணையில் வருடத்திற்கு 85 கோடி மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 
 
அதாவது சீனாவில் மின்சார தேவையைவிட 10 மடங்கு அதிகமாகவே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே தான் சீனாவில் அனைத்து கிரமங்களுக்கும் கூட குறைந்த விலையில் மின்சார சேவை வழங்கப்பட்டுள்ளது. இப்போது இந்த அணையால் பல நகரங்கள் முழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆம், சீனாவில் கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்து வருகிறது. அணை அமைந்துள்ள யாங்சே நதி உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
த்ரீ கோர்ஜஸ் அணையில் வழக்கமான அளவை விட பல மடங்கு நீர்மட்டம் உயந்துள்ளது. இதனால் அணைக்கு வரும் நீர் அப்படியே திறக்கப்பட்டுள்ளது. இதனால் யாங்சி நதியில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணையின் பாதுகாப்பு அளவை தண்ணீர் நீர் மட்டம் எட்டியதாலும் இன்னும் பல நாட்களுக்கு மழை நீடிக்கும் என்பதாலும் அணையே உடையும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதால் கிட்டத்தட்ட 38 மில்லியன் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த அணை உடையும் பட்சத்தில் வுகான் மற்றும் அதனை சுற்றியுள்ள தொழில்துறை நகரங்கள் பல நீரில் மூழ்கும் என்பதுதான் தற்போது சீனாவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்