எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட காதலன் மீது காரை ஏற்றிய காதலி : அதிர்ச்சி வீடியோ

வியாழன், 16 ஜூன் 2016 (18:00 IST)
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள காதலனை, அவரது காதலி கார் ஏற்றி கொலை செய்ய முன்ற சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.


 

 
அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில் வசிப்பர் மிஸ்டி லீ வில்கி(43).  இவர், சைக்கிளில் சென்று கொண்டிருந்த அவருடைய காதலி கார் ஏற்றி கொலை செய்ய முயன்றார். ஆனால், அவரது காதலன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து விட்டார்.
 
அந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 
 
அவருக்கு தலையிலும், முதுகெலும்பிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் மிஸ்டியை கைது செய்தனர். விசாரணையில், தன்னுடைய காதலன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால், கோபத்தில் அவரைகொலை செய்ய முயன்றதாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
 


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்