கல்யாண விருந்துக்கு வைப்பது போல் டைனிங் டேபிள் வைக்கப்பட்டுள்ளது என்றும் வாழை இலை போட்டு அங்கு உணவு பரிமாறுகிறார்கள் என்றும் ஏராளமான அசைவ உணவுகள் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் எவ்வளவு வேண்டுமானாலும் 18 டாலர் கொடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் குமார் என்ற இந்தியர் தான் இந்த உணவகத்தை நடத்தி வருகிறார்.