கத்தாரில் அமெரிக்கவுக்கும் தாலிபானுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் ஆஃப்கானிஸ்தானில் ஆஃப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதனை முடிவுக்கு கொண்டு வர சில மாதங்களாக அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்நிலையில் இன்று கத்தார் தலைநகர் தோகாவில் அமெரிக்கா, தாலிபான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 20 ஆண்டுகளாக நடந்து வந்த போர் முடிவடைகிறது.
இதனை தொடர்ந்து அடுத்த 14 மாதங்களில் ஆஃப்கனிலுள்ள அமெரிக்க படைகள் அனைத்தையும் விலக்கி கொள்கிறது.