அமேசான் நிறிவனம் உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்நிறுவனம் அமெரிக்காவில் 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அமேசான் நிறுவனத்தைத் தொடங்குவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்புதான் பிரபல நாவலாசிரியை மக்கன்சி டட்டிலை, ஜெஃப் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.
இதனால் அவர்கள் இருவரின் 25 ஆண்டுகால மணவாழ்க்கை முடிவுக்கு வருகிறது. அமெரிக்க விவகாரத்து சட்டத்தின் படி கணவன் மனைவி இருவரும் பிரியும் போது சொத்தில் பாதியை மனைவிக்குத் தர வேண்டும். அதன்படிப் பார்த்தால் ஜெப் பிசோவின் அமேசான் பங்குகளில் பாதியான 8 சதவீதப் பங்குகள் மக்கன்ஸிக்கு செல்ல இருக்கிறது. இந்த விவாகரத்தின் 68 பில்லியன் டாலர்களுக்கு சொந்தக்காரியாக , நம்பர் 1 பெண் பணக்காரராக உயர்ந்துள்ளார் மக்கன்சி.