ஈரானுடன் ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளும், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் 2015ல் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டன. சமீப காலத்தில் ஈரான் – அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள மோதலினால் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி செயல்படுவதாக கூறப்படுகிறது. அணுசக்தி ஒப்பந்தத்தை மீறினால் ஈரானுக்கு பொருளாதார தடை விதிப்பதாக அமெரிக்காவும் எச்சரித்து வருகிறது.
இந்நிலையில் தலைநகர் டெஹ்ரானில் பேசிய ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி ”இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் அணுசக்தி பிரச்சினையை ஐ.நாவுக்கு கொண்டு செல்ல போவதாக அச்சுறுத்துகின்றன. ஐரோப்பிய அரசுகள் ஈரானுக்கு எதிரான விரோதத்தை காட்டி வருகின்றன. ஈரான் – ஈராக் போரின் போது சதாம் உசேனுக்கு பக்கபலமாக இருந்தவர்கள் இந்த ஐரோப்பிய அரசுகள். அமெரிக்காவின் எடுபிடியாக அவை செயல்படுகின்றன என்பது தெளிவாக தெரிகிறது” என கூறியுள்ளார்.