அதானியிடம் விமான நிலையத்தை தரக்கூடாது..? - கென்யாவில் விமான ஊழியர்கள் போராட்டம்!

Prasanth Karthick

வியாழன், 12 செப்டம்பர் 2024 (11:05 IST)

கென்யாவில் உள்ள விமான நிலைய நிர்வாகத்தை அதானி நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.

 

 

இந்தியாவை சேர்ந்த மிகப்பெரும் தொழில் நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமம் உலகம் முழுக்க பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. அதில் விமான நிலையம், கப்பல் துறைமுகங்களை குத்தகைக்கு எடுத்து நிர்வகிப்பதும் ஒரு பகுதியாகும். அவ்வாறாக இந்தியாவில் சில விமான நிலையங்கள், துறைமுகங்கள் அதானி நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

 

அதுபோல சமீபத்தில் கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் ஜோமோ கென்யாட்டா விமான நிலையத்தை அதானி நிறுவனத்திற்கு 30 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 
 

ALSO READ: இந்தியப் பரப்பில் ஊடுருவல்! சீனாவுடன் தூதரக உறவை துண்டிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி
 

இந்த ஒப்பந்தத்தின் கீழ் விமான ஓடுதளம் மேம்படுத்தல், புதிய பயணிகள் முனையம் அமைத்தல், மேலும் பல வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்டவற்றை அதானி நிறுவனம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த ஒப்பந்தத்திற்கு கென்யாவில் உள்ள விமான நிலைய பணியாளர்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் தொழிலாளர் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் ஜோமோ கென்யாட்டா விமான நிலையத்தில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்