உலகின் மிகப்பெரிய விமானமான ஏர்லான்டர் -10 சோதனை ஓட்டத்தின் போது விழுந்து விபத்து

வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (11:23 IST)
உலகின் மிகப்பெரிய விமானம் இரண்டாவது சோதனை ஓட்டத்தின் போது திடீரென தரையில் மோதி விழுந்து விபத்துக்குள்ளானது.


 
 
இங்கிலாந்தின் ஹை பெர்ட் ஏர் வைக்கிள்ஸ் என்ற விமான தயாரிப்பு நிறுவனம் ஏர்லான்டர் -10 என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய விமானத்தை வடிவமைத்தது. 
 
நான்கு என்ஜின்கள் கொண்ட இந்த விமானம் 302 அடி நீளமும், 143 அடி அகலமும், 85 அடி உயரமும் கொண்டது. ஹீலியம் வாயு மூலம் இயங்கக்கூடியது. மற்ற விமானங்கள் எழுப்பும் சத்தத்தை விட மிகவும் குறைவான ஒசை எழுப்பும் திறன் கொண்டது. 
 
இந்த விமானத்தின் சோதனை முதல் சோதனை ஓட்டம் கடந்த வாரம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்தின் பெட்போர்ட்ஷையர் கவுண்டியில் இருந்து மீண்டும் சோதனை ஓட்டம் நடந்தது. அப்போது வானில் உயரே புறப்பட வேண்டிய நிலையில், விமானத்தின் முன்பாகம் திடீரென தரையில் மோதி விழுந்து விபத்துக்குள்ளானது. 
 
விமானம் தரையில் மோதியதில் அதிஷ்டவசமாக அதில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்