116 பயணிகளுடன் மாயமானது அல்ஜீரிய விமானம்: கடத்தலா? விபத்தா?

வியாழன், 24 ஜூலை 2014 (17:21 IST)
மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து அல்ஜீரியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஏர் அல்ஜீரியா விமானம் 116 பயணிகளுடன் மாயமானதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
 
பர்கினா ஃபாஸோ என்ற இடத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம் 1 மணி நேரத்திற்குப் பிறகு தொடர்பை இழந்ததாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
 
வான்வழிச் சேவைகள் இயக்ககம் ஏர் அல்ஜீரியா விமானத்தின் தொடர்பை இழந்துவிட்டது. இந்த விமானம் உவாகாடவ்கோவிலிருந்து அல்ஜியர்ஸ் செல்லும் விமானம் ஆகும். விமானம் தரையிலிருந்து கிளம்பிய 50 நிமிடங்களில் தொடர்பை இழந்துள்ளது” என்று அந்த ஏர்லைன் தெரிவித்ததாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
 
ஏ.எச்.5017 என்ற இந்த விமானம் வாரம் 4 நாட்களுக்கு இயக்கப்படுகிறது. இதன் பயண நேரம் 4 மணி நேரங்களே. இந்த விமானத்தில் 135 பேர் பயணிக்க முடியும் என்றும், தற்போது 116 பயணிகள் இதில் இருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக ஏர் அல்ஜிரியா தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்