ஆப்கானில் நடைபெற்ற நெகிழ்ச்சிச் சம்பவம்

ஞாயிறு, 17 ஜூன் 2018 (16:30 IST)
ரம்ஜான் அன்று ஆப்கான் மக்களும் தாலிபன்களும் கட்டித் தழுவி செல்பி எடுத்துக் கொண்ட நெகிழ வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
17 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும்  தலிபான்களுக்கு எதிராக சண்டையிட்டு வருகிறது.
 
இந்நிலையில் ரம்ஜான் நோன்புக் காலத்தையொட்டி அதிபர் அ‌ஷரப் கனி போர் நிறுத்தம் அறிவித்தார். இதனை தலிபான்களும் ஏற்றுக்கொண்டனர்.
இதனையடுத்து ரம்ஜானன்று தலிபான்கள் தெருக்களில் தங்களது மோட்டர் பைக்களுடன் ஆயுதங்களை ஏந்தி வலம் வந்தனர். மேலும்  ஆப்கான் வீரர்கள்ம், பொது மக்களுடன் இணைந்து புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்