ரஷ்யா அனுப்பிய விண்கலத்தால் நிலவில் 10 அடி பள்ளம்? நாசா அதிர்ச்சி தகவல்..!
சனி, 2 செப்டம்பர் 2023 (09:14 IST)
நிலவை ஆய்வு செய்வதற்காக ரஷ்யா சமீபத்தில் லூனா 25 என்ற விண்கலத்தை அனுப்பிய நிலையில் அந்த விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் நிலவை ஆய்வு செய்வதற்காக ரஷ்யா அனுப்பிய விண்கலம் நொறுங்கி விழுந்ததால், நிலவின் மேற்பரப்பில் புதிதாக 10 மீட்டர் விட்டதிற்கு பள்ளம் ஒன்று இருப்பதை நாசாவின் எஸ்ஆர்ஓ ஆர்பிட்டர் கண்டுபிடித்துள்ளது.
இந்த பள்ளம் ரஷ்யா அனுப்பிய விண்கலத்தால் தான் ஏற்பட்டிருக்கலாம் என்று நாசா தகவல் தெரிவித்துள்ள நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தால் நிலவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் நாசாவின் இந்த தகவலை ரஷ்யா மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.