முதியோர் இல்லத்தில் சேர்த்த மகன் - போட்டுத்தள்ளிய தாய்

புதன், 4 ஜூலை 2018 (13:01 IST)
அமெரிக்காவில் தாய் ஒருவர் பெற்ற மகன் தன்னை முதியோர் இல்லத்தில் சேர்க்க முற்பட்டதால் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.
இன்றைய நவீன காலக் கட்டங்களில் பெற்றோர் தங்களது குழந்தைகளை பெரும்பாடு பட்டு வளர்க்கின்றனர். கஷ்டப்பட்டு சம்பாதித்து குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு, வீட்டு வாடகை, கரண்ட் பில், மளிகை செலவு, பிள்ளைகளின் படிப்பு செலவு என கஷ்டப்பட்டு தங்களது பிள்ளைகளை படிக்க வைத்து ஆளாக்குகின்றனர். ஒரு சில பிள்ளைகளோ நல்ல நிலைக்கு வந்த பின்னர், பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகின்றனர். 
 
இதேபோல் அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தை சேர்ந்த  மூதாட்டியை, அவரது மகன் முதியோர் இல்லத்தில் சேர்க்க முற்பட்டார். ஆனால் அந்த தாய் எனக்கு முதியோர் இல்லத்திற்கு செல்ல பிடிக்கவில்லை என கூறியுள்ளார்.
 
இதனை சற்றும் கண்டுகொள்ளாத அந்த மகன், கண்டிப்பாக உங்களை முதியோர் இல்லத்தில் சேர்த்தே தீருவேன் என விடாப்பிடியாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மூதாட்டி, தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மகனை சுட்டுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலே பலியாகி உள்ளார்.
 
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் திறையினர் மூதாட்டியை கைது செய்தனர். இச்சம்பவம் அரிசோணா மாகாணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்