உயிருக்கு போராடிய பெண்: செல்பி எடுக்கும் வாலிபர் - எங்கே போனது மனிதம்?

செவ்வாய், 5 ஜூன் 2018 (15:58 IST)
பெண் ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கையில் நபர் ஒருவர் அவர் முன்னால் நின்று செல்பி எடுத்த புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகமெங்கும் வயது வித்தியாசம் இன்றி இன்று பரவியுள்ள ஒரு வியாதி செல்பி. எதை பார்த்தாலும், யாரை பார்த்தாலும் உடனே மொபைலை எடுத்து செல்பி எடுப்பது இப்போது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது.
 
இந்நிலையில் இத்தாலியில் ரயிலில் பயணித்த பெண் ஒருவர்,  கவனமின்றி ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். 
 
இதனையடுத்து அங்கு வந்த மருத்துவர்கள், அந்த பெண்ணிற்கு முதலுதவி சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர். அப்போது நபர் ஒருவர் அவர்களுக்கு முன் நின்று செல்பி எடுத்துக்கொண்டிருந்தார். இந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.
 
இதனைப்பார்த்த பலர் எங்கே போகிறது மனிதம். ஒரு பெண் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் வேளையில், இப்படி செய்வது நியாயமா என பலர் தங்களது ஆதங்கத்தை வெளிபடுத்தி வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்